போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

கடந்த மூன்று வருடங்களுக்கு முன் கன்னடத்தில் தயாராகி, பான் இந்தியா படமாக வெளியாகி, வெற்றியை பெற்ற படம் கேஜிஎப். பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்த இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பும் கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டது. இடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளன. அந்தவகையில் இந்தப்படத்தின் முதல் பாகத்தில் நடித்திருந்த மாளவிகா அவினாஷ், தற்போது இரண்டாம் பாகத்திற்காக டப்பிங் பேசி வருகிறார். இதுகுறித்த புகைப்படங்களையும் வெளியிட்டு உள்ளார்..
கேஜிஎப் முதல் பாகத்தில் டிவி சேனல் அதிகாரியாக தனது பேட்டியின் மூலம் அந்தப்படத்தின் கதையை நகர்த்தும் பணியை செய்திருந்தார் மாளவிகா அவினாஷ். அதன்மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து பாராட்டுக்களையும் பெற்றார். கடந்த இருபது வருடங்களுக்கு முன் மாதவன் நடித்த ஜேஜே படத்தில் நடித்தபோது கதாநாயகிக்கு இணையாக பேசப்பட்ட மாளவிகா, பல சீரியல்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக அண்ணி என்கிற சீரியலில் நடித்து புகழ்பெற்றதால் அண்ணி மாளவிகா என்றால் டிவி ரசிகர்கள் பலருக்கும் இவரை நன்கு தெரியும்.