தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தெலுங்கு சினிமாவில் மிக பிஸியான சண்டைப்பயிற்சி இயக்குனர்களாக வலம் வருபவர்கள் ராம், லட்சுமணன் செல்லா என்கிற இரட்டையர். தர்பார் படத்தில் கண்ணுல திமிரு பாடலுக்கு நடனமாடிக்கொண்டே ரஜினிகாந்த் சண்டையிடும் சண்டைக்காட்சியை வடிவமைத்தவர்கள் இவர்கள்தான். ராஜமவுலி இயக்கத்தில் உருவாகிவரும் ஆர்ஆர்ஆர் படத்தில் இருந்து சமீபத்தில் இவர்கள் வெளியேறிய நிலையில், தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்துவரும் அகண்டா என்கிற படத்தில் இருந்தும் இவர்கள் வெளியேறி உள்ளனர். பாலகிருஷ்ணாவின் படங்களுக்கு பில்டப்புடன் சண்டைக்காட்சிகளை அமைத்துக் கொடுத்தவர்கள் வெளியேறியது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக தெலுங்கில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பெரிய நடிகர்களின் படப்பிடிப்பு எல்லாம், ஒரே சமயத்தில் தற்போது துவங்கப்பட்டுள்ளன. இதனால், ஏற்கனவே ராம், லட்சுமணன் செல்லா இரட்டையர் மகேஷ்பாபு நடித்து வரும் சர்க்காரு வாரி பாட்டா மற்றும் சிரஞ்சீவியின் ஆச்சார்யா ஆகிய படங்களுக்கு பணி புரிவதற்காக தேதிகளை ஒதுக்கிக் கொடுத்து இருந்ததால் ஆர்ஆர்ஆர் மற்றும் அகண்டா ஆகிய படங்களில் இருந்து வேறுவழியின்றி தான் விலகியுள்ளனராம்.