விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் | கேரளாவில் ஜனநாயகன் முதல் நாள் முதல் காட்சி 6 மணிக்கு தான் |

சமந்தா நடித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான தி பேமிலி மேன் 2 வெப்சீரிஸ் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது, அதே அளவுக்கு சர்ச்சைகளையும் கிளப்பியது. இந்த வெப் சீரிஸைசை பாலிவுட்டை சேர்ந்த ராஜ்-டிகே என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்கி இருந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அடுத்ததாக இயக்க உள்ள வெப்சீரிஸில் நடிகர் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என ஏற்கனவே சொல்லப்பட்டது. தற்போது அதை உறுதிப்படுத்தும் விதமாக மும்பையில் நடைபெறும் இந்த வெப்சீரிஸின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார் விஜய்சேதுபதி.
இந்தநிலையில் இந்த படப்பிடிப்பு தளத்திற்கு திடீர் விசிட் அடித்து படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தி உள்ளார் நடிகர் துல்கர் சல்மான். பிரபல நடிகர்களின் படப்பிடிப்பு அருகருகே நடைபெற்றால் ஒருவரை ஒருவர் சென்று சந்தித்துக் கொள்வது இப்போது புதிய டிரெண்ட் ஆகவே மாறிவிட்டது. தற்போது 'சுப்' எனும் இந்திப்படத்தில் நடித்து வருகிறார் துல்கர் சல்மான். அந்த வகையில் அருகில் விஜய்சேதுபதியின் படப்பிடிப்பு நடைபெறுவதை கேள்விப்பட்டு, அங்கே விசிட் அடித்துள்ளார் துல்கர் சல்மான். இதேபோல சமீபத்தில் கூட மும்பையில் துல்கர் சல்மானின் இந்த படப்பிடிப்பு தளத்திற்கு, நடிகர்கள் அரவிந்த்சாமியும் குஞ்சாக்கோ போபனும் விசிட் அடித்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.