எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? | ரசிகர்களுடன் போட்டோ, விருந்து : தனுஷ் மாறியது ஏன் | மாளவிகா மோகனனின் பிறந்தநாளுக்கு போஸ்டர் வெளியிட்டு அசத்திய மும்மொழி பட குழுவினர் | 50 வருடம் ஒருவர் சூப்பர் ஸ்டாராவே இருக்கிறாரே அதுதான் பெரிய விஷயம் ; கூலி விழாவில் சத்யராஜ் புகழாரம் | கவர்ச்சியாக நடித்தவர் கடவுளாக நடிக்கலமா? : துர்க்கை ஆக நடித்த கஸ்துாரி பதில் |
ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் என பலர் முக்கிய வேடங்களில் நடித்து வெளியாகியுள்ள படம் ஜெய்பீம். இந்த படத்தில் சந்துரு என்ற வழக்கறிஞராக நடித்திருக்கும் சூர்யா, இருளர் இன மக்களுக்காக வாதாடும் ஒரு வழக்கினை அடிப்படையாகக் கொண்டே இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஐ.ஜி பெருமாள் சாமியாக பிரகாஷ்ராஜ் நடித்திருக்கிறார். இவர் திருட்டுப்போன நகைகளை பற்றி விசாரிக்கும்போது அடகு கடை வைத்திருப்பவரிடம் விசாரிப்பார். அப்போது தமிழ் தெரிந்த அவர் ஹிந்தியில் பேசுவார். அதைக்கேட்டு பளார் என அவரது கன்னத்தில் அறையும் பிரகாஷ்ராஜ், தமிழில் பேசு என்பார். இந்த காட்சி தற்போது ஒருசாரர் மத்தியில் விமர்சனங்களை எழுப்பி இருக்கிறது.
அதையடுத்து பிரகாஷ்ராஜ் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். அதில், ஜெய்பீம் படத்தில் பழங்குடியின மக்களின் வேதனையை பார்க்காமல் அநியாயத்தை பார்த்து பரிதாபப்படாமல் ஹிந்தியில் பேசியவரை நான் அடித்த விஷயத்தைதான் பெருசு படுத்துகிறார்கள் .இவர்கள் புரிந்து கொண்டது அவ்வளவுதான். இது அவர்களின் வேற மாதிரியான நோக்கத்தைதான் வெளிப்படுத்துகிறது. அதோடு ஒரு திரைப்படம் என்று வருகிறபோது சில விஷயங்களை ஆவணப்படுத்த வேண்டும். ஒரு வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி, உள்ளூர் மொழி தெரிந்த ஒருவர் கேள்வி கேட்காமல் இருக்க ஹிந்தியில் பேசினால் இப்படித்தான் நடந்து கொள்வார்.
இந்த ஜெய்பீம் படம் 1990களின் பின்னணியாகக் கொண்டது. அந்த கேரக்டருக்கு ஹிந்தி திணிக்கப்பட்டு இருந்தால் இப்படித்தான் செய்திருப்பார். முறையான கல்வி பெறாத பழங்குடியினர் பெண்களுக்கு ஆங்கிலத்தில் நோட்டீஸ் அனுப்பப்பட்ட வழக்குகள் ஏராளம். அதனால் போதுமான கல்வி அறிவு இல்லாத மக்களுக்கு புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே ஹிந்தியில் பேசிய அவரை தமிழில் பேசு என்று அந்த போலீஸ் அதிகாரி அடிப்பார். இந்த உண்மையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அது இல்லாமல் சர்ச்சையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விஷயத்தை தவறான நோக்கத்தில் யாரும் பார்க்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார் பிரகாஷ்ராஜ்.