மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
சூர்யா தயாரித்து நடித்துள்ள ஜெய்பீம் படம் சில சர்ச்சைகளில் சிக்கியபோதும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்தபடம் நிஜக்கதையை தழுவி எடுக்கப்பட்டது என்பதோடு இந்த படத்தில் இடம் பெற்ற ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாள் தற்போது வாழ்ந்து வருகிறார். இந்தநிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ், ராசாக் கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளுக்கு தான் வீடு கட்டி கொடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், செய்யாத குற்றத்திற்காக சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டு ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளின் இன்றைய நிலையை அறிந்து வருத்தமுற்றேன். பார்வதி அம்மாளுக்கு எனது சொந்த செலவில் வீடு கட்டிக் கொடுக்கிறேன். பார்வதி அம்மாளின் வறுமை நிலையை எனது கவனத்துக்கு கொண்டு வந்தவர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார் லாரன்ஸ்.
மேலும், 28 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு கொடூர நிகழ்வை இன்றைக்கு தமிழகம் முழுவதும் பேசு பொருளாக்கிய ஜெய்பீம் படக்குழுவுக்கும், ஜெய்பீம் படத்தை ஒரு கலைப்படைப்பாக மாற்றிய சூர்யா மற்றும் ஜோதிகா அவர்களுக்கும், இயக்குனர் ஞானவேல் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும் என பதிவிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ்.