பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
மலையாள திரையுலகில் மோகன்லால் பிரியதர்ஷன் கூட்டணியில் மிகப் பிரம்மாண்டமான வரலாற்றுப் படமாக உருவாகியுள்ளது மரைக்கார் ; அரபிக்கடலின்டே சிம்ஹம். அர்ஜுன், சுனில் ஷெட்டி, பிரபு, கீர்த்தி சுரேஷ், மஞ்சுவாரியர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் கிட்டத்தட்ட 80 கோடி செலவில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த படம் தியேட்டர்களில் வெளியானால் தான் ரசிகர்களின் பார்வைக்கு விருந்தாகும் என்பதால் ஒடிடியில் வெளியிடாமல் இதன் ரிலீஸை தள்ளிப் போட்டு வந்தார் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர்.
ஆனால் தற்போது கேரளாவில் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் கூட, 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்கிற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மரைக்கார் வெளியாகும் அதே நாளில் மற்ற படங்களும் வெளியானால் எதிர்பார்த்த எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைக்காது என்பதுடன் வசூலிலும் பெரிய நஷ்டம் ஏற்படும் என்பதால் தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்யும் எண்ணத்தை மாற்றிக்கொண்டார் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர்.
அவரது இந்த முடிவு தியேட்டர்காரர்கள் மத்தியில் சலசலப்பையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. கேரள மாநில செய்தித்துறை அமைச்சர் ஷாஜி செரியன் இந்த விஷயத்தில் தலையிட்டு தற்போது சமரசம் ஏற்படுத்தியுள்ளார். அதன்படி மரைக்கார் திரைப்படம் வரும் டிசம்பர் இரண்டாம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்றும், அதன் பின்னரே ஓடிடியில் ரிலீஸாகும் என்றும் சமரச முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதற்கேற்றபடி மரைக்கார் ரிலீஸில் சில சலுகைகள் அளிக்கப்படும் என சொல்லப்படுகிறது
இது குறித்து அமைச்சர் ஷாஜி செரியன் கூறும்போது, தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் இந்த முடிவை எடுத்ததன் மூலம் மிகப்பெரிய தியாகம் செய்துள்ளார் என்று கூறியுள்ளார்.