துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
தென்னிந்திய திறமையான நடிகைகளில் சாய் பல்லவியும் ஒருவர். கதையில் தனது கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே அந்த படங்களில் நடிக்க ஒத்துக் கொண்டு வரும் அவர் காதல், சென்டிமென்ட் என பலதரப்பட்ட கதைகளில் நடித்துள்ளார். சமீபத்தில்கூட சேகர் கம்முலா இயக்கத்தில் நாக சைதன்யாவுடன் அவர் நடித்து வெளியான லவ் ஸ்டோரி படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அடுத்தபடியாக ராணாவுடன் நடித்துள்ள விரட பருவம் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில், சாய் பல்லவி அளித்த ஒரு பேட்டியில், தன்னிடமுள்ள நகைச்சுவை நடிப்பை வெளிப்படுத்த ஆர்வமாக இருப்பதாக தெரிவித்திருப்பவர், அதற்கேற்ற கதைகளை இயக்குனர்களிடமிருந்து தான் எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.