மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் கொரோனா தொற்று காரணமாக நேற்று காலமானார். நடனம் மட்டும் அல்லாமல் ஒரு நகைச்சுவை நடிகராகவும் இன்றைய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சிவசங்கர். குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இவரை ரொம்பவே பிடிக்கும்.. அஜித் நடித்த வரலாறு படத்தில் அவரை பரதநாட்டிய கலைஞராக, சற்றே நளினமான பெண் தன்மை கொண்ட ஒரு மனிதராக மிக வித்தியாசமாக காட்டியதில் சிவசங்கரின் பங்கு மிக அதிகம்.. அந்தப்படத்தில் சிவசங்கரின் பங்களிப்பு குறித்து தற்போது நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டுள்ளார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.
“இந்தப்படத்தில் அஜித்தின் மூன்று கதாபாத்திரங்களில் பரதநாட்டிய கலைஞர் கதாபாத்திரத்தை உருவாக்கியபோது இதை நான் சரியாக செய்ய முடியுமா, திரையில் பார்க்கும்போது இது வேறுவிதமாக தெரிந்துவிடாதே என கொஞ்சம் தயங்கினார் அஜித். அப்போது நான் அவரிடம் சிவசங்கர் மாஸ்டரை நம்பி இதை தாரளமாக செய்யலாம் என கூறினேன்.
இந்தப்படத்தின் கதாபாத்திரம் போலவே, பரதநாட்டியத்தின் காரணமாக அவரை அறியாமலேயே அந்த பெண் தன்மை வந்துவிட்டது என்றும் ஆனால் சிவசங்கருக்கும் இரண்டு மகன்கள் உள்ளார்கள் என்றும் கூறினேன். அவர் மீதுள்ள மரியாதை காரணமாகவே அந்தப்படத்தில் அஜித்தின் கதாபாத்திரத்திற்கு சிவசங்கர் என பெயரும் வைத்தேன்.
இந்தப்படத்தில் அஜித்தின் நடை உடை பாவனைகளை அழகாக வடிவமைத்து கொடுத்தார் சிவசங்கர். அதுமட்டுமல்ல, இந்த அஜித் கதாபாத்திரத்தை வைத்து ஒரு சண்டைக்காட்சியை படமாக்கியபோது, ஒவ்வொரு எதிரியையும் அஜித் அடித்து வீழ்த்தும்போது ஒவ்வொருவிதமான நடன முத்திரையை போஸாக காட்டுவது போல வைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். அதற்கு பொருத்தமாக அந்த சண்டைக்காட்சியில் தனது பங்களிப்பை சிறப்பாக செய்து கொடுத்தார் சிவசங்கர் மாஸ்டர். தியேட்டரில் அந்த சண்டைக்காட்சிக்கு ரசிகர்களின் கைதட்டல் அதிகம் கிடைத்தது” என கூறியுள்ளார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.