மறு உத்தரவு வரும் வரை கேரளா ஸ்டோரி 2 ரிலீஸை நிறுத்திவைத்த கேரள உயர்நீதிமன்றம் | கேரளாவில் முதன்முறையாக பஞ்சாயத்து நிர்வாகத்தால் கட்டப்பட்ட தியேட்டர் : பாவனா திறந்து வைக்கிறார் | தடை செய்யப்பட்ட துரந்தர் படம் பார்ப்பதற்காகவே இந்தியா வந்தார்கள் : ரசிகர்கள் மீது மாதவன் நம்பிக்கை | 5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நாயகியாக நடிக்கும் மாதுரி ஜெயின் | அனுபமாவை மட்டன் சாப்பிடுவதையே நிறுத்த வைத்த அதிர்ச்சி சம்பவம் | தமிழில் இடைவெளி இல்லை: பிரியங்கா மோகன் | அம்மா மாதிரி வருவேன்: குஷ்பு மகள் நம்பிக்கை | 'ப்ரோ கோட்' டைட்டில் வழக்கை வாபஸ் பெற்றார் ரவி மோகன் | பிளாஷ்பேக்: தஞ்சை சிறையில் தயாரான படம் | பிளாஷ்பேக்: ஓட்டல் நடத்திய முதல் நடிகர் |

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கும் தனது 61வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அஜித் குமார். வங்கிக் கொள்ளை சம்பந்தப்பட்ட கதையில் உருவாகும் இந்த படத்தில் அஜித் குமார் ஹீரோ- வில்லன் என இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் அஜித் நடித்து வரும் புதிய கெட்டப்பின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை பெரிய அளவில் ஈர்த்து வருகிறது. இந்த நிலையில் அஜித் 61வது படத்தில் நாயகியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.




