பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
திரையுலக நடிகைகளில் பலரும் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தான் அதிகம் பதிவிடுவது வழக்கம். அவர்களது பலவிதமான புகைப்படங்களைப் பதிவிட அந்த வலைளத்தைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்களைப் பெற்றிருப்பதில் நடிகை ராஷ்மிகா மந்தனா தான் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு 24.8 மில்லியன் பாலோயர்கள் உள்ளார்கள். அவருக்கு அடுத்து 20.2 மில்லியன் பாலோயர்களுடன் காஜல் அகர்வால் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவருக்கடுத்தபடியாக தற்போது 20 மில்லியன் பாலோயர்களைத் தொட்டு சமந்தா மூன்றாவது இடத்தில் உள்ளார்.
20 மில்லியன் பாலோயர்களைப் பெற்றதையடுத்து “உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி,” எனப் பதிவிட்டுள்ளார் சமந்தா. சமீபத்தில் திருமண வாழ்க்கையிலிருந்து பிரிந்தாலும் சமந்தாவிற்கு ரசிகர்களின் ஆதரவு குறையவில்லை என்பதை இது காட்டுகிறது.
சமந்தா தற்போது தமிழில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்', தெலுங்கில் 'சாகுந்தலம்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். 'புஷ்பா' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.