நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் |
தெலுங்குத் திரையுலகில் கிளாமர் டாலாக வலம் வருபவர் ராஷ்மிகா. தமிழில் 'சுல்தான்' படத்தில் மட்டுமே நடித்தார். மீண்டும் இந்தப் பக்கம் எப்போது வருவார் என தமிழ் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ராஷ்மிகாவின் அடுத்த பெரிய வெளியீடாக 'புஷ்பா' படம் வெளிவர உள்ளது. அல்லு அர்ஜுன் ஜோடியாக வள்ளி என்ற கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார் ராஷ்மிகா. இயல்பாகவே நல்ல சிவப்பாக இருக்கும் ராஷ்மிகா இந்தப் படத்திற்காக கருப்பு நிற மேக்கப்புடன் கிராமத்துப பெண்ணாக மாறியிருக்கிறார்.
சிட்டியிலேயே பிறந்து வளர்ந்த பெண்களுக்கு கிராமத்துப் பெண்களின் பழக்க, வழக்கம், நடை, உடை அவ்வளவு சீக்கிரம் வராது. அதனால் இந்தப் படத்தில் நடிப்பதற்காக பிரத்யேக பயிற்சிகளை மேற்கொண்டாராம் ராஷ்மிகா.
இது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில், “இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டேன். கிராமத்து பெண்களின் மேனரிசங்கள், அவர்களது முகபாவங்கள் எப்படி இருக்கும் என்பதை கற்றுக் கொண்டேன். திருப்பதி அருகில் உள்ள ஒரு கிராமத்திற்குச் சென்று அங்குள்ள பெண்களுடன் பழகினேன், பேசினேன். அவர்களது வாழ்க்கை முறை எப்படி உள்ளது, உடல்மொழி எப்படி உள்ளது என்றும் கூர்ந்து கவனித்து தெரிந்து கொண்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் நடக்கும் செம்மரக் கடத்தலைப் பற்றிய படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் டிசம்பர் 6ம் தேதி வெளியாகிறது, படம் டிசம்பர் 17ம் தேதி ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.