தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

காதல் கொண்டேன் படம் மூலம் அறிமுகமான சோனியா அகர்வால், அதன் பின்னர் 7ஜி ரெயின்போ காலனி, திருட்டுப் பயலே, புதுப்பேட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ‛கிராண்ட்மா' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் சோனியா அகர்வால் பேசியதாவது:
கிராண்மா படத்தில் நான் ஆசிரியை வேடத்தில் நடித்திருக்கிறேன். பல படங்களில் நான் சாதுவான பெண்ணாகவே நடித்து உள்ளேன். இயல்பாக நான் மிகமிக துணிச்சலான பெண். நேரில் பார்த்தால் அப்படி தெரியாது. நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது என்னைக் கேலி செய்த ஒரு மாணவனை கன்னத்தில் அறைந்து நான் துணிச்சலான பெண் என்பதை நிரூபித்தேன்.
எனது தாய்மொழி பஞ்சாபி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன். அடுத்து 'கிராண்ட்மா' படம் திரைக்கு வர உள்ளது.
எனக்கு ஒரே ஒரு தம்பி மட்டும் இருக்கிறார். அவர் இசையமைப்பாளராக பணிபுரிகிறார். எனக்கு இசையில் ஆர்வம் உண்டு என்றாலும், சொந்த குரலில் பாடி நடிக்கவில்லை. அடுத்து ஒரு படத்தில் பாடகியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.