நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் |
மறைந்த எழுத்தாளர் கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவல், தற்போது அதே பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது. மணிரத்னம் இயக்கும் இப்படம் இருபாகங்களாக உருவாகி வருகிறது. ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஏ,ஆர்.ரகுமான் இசையில் உருவாகும் இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.
பொன்னியின் செல்வன் திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வனில் முக்கிய ரோலில் நடிப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இவரின் காட்சிகள் சில இன்னும் படமாக்கப்பட வேண்டி இருக்கிறதாம். ஏன் தாமதமென்று விசாரித்தால், இரண்டு நாட்கள் முழுமையாக நீருக்குள் படப்பிடிப்பு எடுக்க வேண்டியிருக்கிறதாம். இந்த படப்பிடிப்பிற்கு ஐஸ்வர்யா ராய் ஒரு நிபந்தனை விதித்திருக்கிறார்.
என்னவென்றால், இரண்டு நாட்கள் நீருக்குள் நடிக்க வேண்டியிருப்பதால், நீண்ட நேரம் தண்ணீருக்குள் இருக்க முடியாது. அதனால், நீரினை ஒரு குறிப்பிட்ட வெப்பத்தில் பராமரிக்க வேண்டும். அதாவது, மிதமான சூட்டுடன் நீர் இருக்க வேண்டுமென்று கூறியிருக்கிறார். ஐஸ்வர்யா ராயின் நிபந்தனையைச் சாத்தியப்படுத்த வேண்டுமென்பதற்காகப் படப்பிடிப்பு கொஞ்சம் தாமதமாகிறதாம். விரைவிலேயே, ஐஸ்வர்யா ராய் கேட்டபடியே படப்பிடிப்பும் நடக்கும் என்கிறார்கள்.