டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி, நடிகை மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது . இதையடுத்து கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு வழக்கு செய்து நடிகை மீரா மீதும் மற்றும் அவர் நண்பர் ஷாம் அபிஷேக் ஆகியோரை கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி கைது செய்தது. அதன் பிறகு இந்த வழக்கில் அவர்களுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் அளித்தது. அதோடு அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்கள். அந்த நகலை கொடுப்பதற்காக நடிகை மீரா மிதுன் மற்றும் ஷாம் அபிஷேக் ஆகியோரை டிசம்பர் 17ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. போலீஸ் தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் சுதாகர் அவருக்கு ஜாமின் வழங்கியபோது ஒவ்வொரு திங்கட்கிழமையும் 10:30 மணிக்கு விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையையும் அளித்திருந்தார். ஆனால் மீரா மிதுனும், அவரது நண்பரும் அதன்படி நடக்கவில்லை. அதையடுத்து நிபந்தனையை நிறைவேற்றவில்லை என்றால் ஜாமினை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்யலாம் என காவல் துறைக்கு நீதிபதி அறிவுரை வழங்கியுள்ளார். அதையடுத்து மீரா மிதுன் மீதான வழக்கு விசாரணை ஜனவரி 14ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி , அன்றைய தினம் நீதிமன்றத்தில் மீரா மிதுன் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.