ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சர்ச்சை பேச்சால் சிக்கியுள்ள நடிகை மீரா மிதுன் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட, ஏழு பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர். இதனால் அவர் கைது செய்யப்படலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
மாடல் அழகி போட்டிகளில் கலந்து கொண்டிருந்த மீரா மிதுன் சினிமா மற்றும் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களின் மூலம் நடிகையாக திரையில் தோன்றினார். எப்போதும் சர்ச்சையாக கருத்துகளை கூறி பொதுவெளியில் சிக்கிக்கொள்ளும் மீரா மிதுனை பலரும் தொடர்ந்து கண்டித்தும் வந்தனர். நெட்டிசன்களும் தங்களது பங்கிற்கு சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் ட்ரோல் செய்து வந்தனர். அந்த வகையில் தற்போது அவர் பேசிய பேச்சு இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சில தினங்களுக்கு முன் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் எஸ்சி எஸ்டி மக்களை குறித்து அவதூறான கருத்துகளை பேசியிருந்தார். சினிமாத்துறையே அவர்களால் தான் மோசமாக உள்ளது என்றும் கூறியிருந்தார். இணையத்தில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் மீரா மிதுனுக்கு தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இதற்கிடையில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி வன்னியரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்திருந்தார். புகாரை எடுத்துகொண்ட காவல்துறையினர் மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என தெரிய வருகிறது.