சமந்தாவிற்கு ஆண் குழந்தை : பெயரையும் அறிவித்தார் | பிரபல இயக்குனரின் பேத்தியை மணந்தார் நடிகர் அஸ்வின் குமார் | பெண் போராளியாக நடிக்கும் இனியா | பிளாஷ்பேக் : 'அண்ணாமலை'யை இயக்கிய 3வது இயக்குநர் | பிளாஷ்பேக் : 8 ஆயிரம் அடி நீக்கப்பட்ட 'பச்சை விளக்கு' | சர்வதே பதுக்கல் பின்னணியில் உருவாகும் 'சிவப்பு நட்த்திரம்' | மீண்டும் அம்மா ஆகிறார் 'மைனா' நந்தினி | மிஷ்கினுக்கும் எனக்கும் அப்பா - மகள் உறவு : கீர்த்தி சுரேஷ் கோபம் | இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பாரதிராஜா, பாக்யராஜிற்கு அஞ்சலி | ராதிகா ஆப்தே சர்ச்சை குறித்து மவுனம் கலைத்த கீர்த்தி சுரேஷ்! |

பட்டியல் இன மக்களைப் பற்றி தவறாக விமர்சனம் செய்து வீடியோவை வெளியிட்ட நடிகை மீரா மிதுனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் . தலைமறைவாக இருந்த மீரா மிதுனை கேரளாவில் கைது செய்த போலீசார் அதையடுத்து சென்னை கொண்டு வந்து சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர். அவரிடத்தில் விசாரணை நடத்திய நீதிபதி அவரை வருகிற 27-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
அதன்பிறகு தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் மீராமிதுன். மேலும் நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை செய்துவரும் போலீசாரிடம் அவர் அடிக்கடி மாற்றி மாற்றி பேசி வருவதால் மன நல மருத்துவரை கொண்டு விசாரணை தொடங்க திட்டமிட்டு உள்ளார்கள்.
இந்நிலையில் போதை மருந்து உள்ளிட்ட பொருட்களை வினியோகம் செய்து வந்த மீரா மிதுனின் தோழி ஒருவரும் விரைவில் கைது செய்யப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதோடு தற்போது நடிகை மீரா மிதுன் சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிட்டு வந்த அவரது யூடியூப் சேனலை முடக்கவும் சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.




