தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

நடிகர் அஜித்தின் ரசிகர்கள் இனி 'வலிமை அப்டேட்' என எங்கும் குரல் எழுப்ப மாட்டார்கள். படம் 2022க்கு வெளிவர உள்ள நிலையில் படத்தின் முக்கிய அப்டேட் இன்று(டிச., 30) வெளியாக உள்ளது. மாலை 6.30 மணிக்கு படத்தின் டிரைலர் வெளியாகிறது. இதன் உடன் வெளியீட்டுத் தேதியும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஜீ ஸ்டுடியோஸ், “பெரிதாக ஒன்று வரப் போகிறது, இந்த இடத்தைப் பாருங்கள், வலிமை மிகப் பெரிய அப்டேட்,” என முதலில் அறிவித்திருந்தது. சற்று முன்னர், ‛‛இனி அமைதி காக்க முடியாது,. காத்திருப்பு முடிந்தது. வலிமை டிரைலர் மாலை 6.30 மணிக்கு வெளியாகும்” என ஜீ ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் விஜய், அஜித் ஆகியோர் நடிக்கும் படங்களின் டீசர், டிரைலர் வெளியாகும் போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். இரண்டு ரசிகர்களும் ஒருவருக்கொருவர் சூடாக சண்டையிட்டுக் கொள்வார்கள்.
இதற்கு முன்பு வெளிவந்த விஜய் நடித்த 'மாஸ்டர்' டீசர் வெளிவந்த போது புதிய சாதனைகள் சிலவற்றைப் படைத்தது. இப்போது அஜித் நடித்துள்ள 'வலிமை' டிரைலர் வரப் போகிறது. இது முந்தைய விஜய் படங்களின் சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைக்கப் போகிறதா என்ற எதிர்பார்ப்பு அஜித் ரசிகர்களிடம் உள்ளது.