சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: பரத் அணி செயற்குழு உறுப்பினர்கள் வெற்றி | கல்யாணி சூப்பர் உமனாக நடிக்கும் ‛லோகா': ஓணம் பண்டிகைக்கு ரிலீசாகிறது | அமெரிக்க முன்பதிவில் 'கூலி' புதிய சாதனை | இரண்டு மொழிகளில் வெளியாகும் 'பர்தா' | அரசு வாகனத்தில் சொகுசு பயணம்: சர்ச்சையில் சிக்கிய நித்தி அகர்வால் | நீடிக்கும் ஸ்டிரைக் - அமைச்சர்களை சந்தித்த தெலுங்கு தயாரிப்பாளர்கள் | பிளாஷ்பேக்: 40 வருடங்களுக்கு முன்பே 'பராசக்தி' தலைப்புக்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக் : தமிழில் முதல் வண்ண படம் | 'கூலி, வார் 2' டிக்கெட் கட்டண உயர்வுக்கு தெலுங்கு திரையுலகினர், ரசிகர்கள் எதிர்ப்பு | மோனிகா பெலூசி ரசித்த 'கூலி மோனிகா' பாடல் |
மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் பாடகராக அறிமுகமானவர் சித் ஸ்ரீராம். அதன்பிறகு தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பாடகராகி விட்டார். இந்தநிலையில் தான் தயாரித்த வானம் கொட்டட்டும் என்ற படத்தில் அவரை இசையமைப்பாளராக்கினார் மணிரத்னம்.
இந்தநிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி முடித்துள்ள மணிரத்னம் இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமடைந்துள்ளார். அதோடு பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கு முன்பாக இன்னொரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ள மணிரத்னம் அந்த படத்தில் நாயகனாக நடிக்க சித்ஸ்ரீராமை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படத்திற்கான கதையை ஜெயமோகன் தற்போது எழுதி வருவதாகவும் கூறப்படுகிறது.