சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் |
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை அடுத்து மூன்றாவது முறையாக எச்.வினோத் உடன் இணைந்து தனது 61வது படத்தில் நடிக்கப் போகிறார் அஜித்குமார். வலிமை படம் திரைக்கு வந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. போனி கபூர் தயாரிக்கும் இந்தப்படத்தில் ஜிப்ரான் இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவரை அஜித் நடித்த படங்களுக்கு ஜிப்ரான் இசையமைக்கவில்லை என்றாலும் கார்த்தி நடிப்பில் எச்.வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு அவர்தான் இசையமைத்திருந்தார். இந்த நிலையில் வலிமை படத்தை அடுத்து அஜீத்தை வைத்து வினோத் இயக்கும் படத்திற்கு ஜிப்ரான் இசையமைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.