தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்த 'புஷ்பா' படம் கடந்த மாதம் தியேட்டர்களில் வெளியானது. தெலுங்கில் தயாரான இந்தப் படம் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.
பொதுவாக ஒரு மொழியில் தயாரிக்கப்படும் படங்கள் மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்படும் போது அவற்றின் பாடல்கள் பெரிய அளவில் ஹிட் ஆவதில்லை. எப்போதோ ஒரு முறைதான் மற்ற மொழிகளிலும் அந்தப் பாடல்கள் நேரடி மொழிப் பாடல்களைப் போல ஹிட்டாகும். அது 'புஷ்பா' படத்திற்கு அமைந்துள்ளது.
இப்படத்தின் பாடல்கள் தெலுங்கில் பெற்ற வரவேற்பைப் போலவே மற்ற மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் இடம் பெற்ற பாடல்களில் 'ஓ சொல்றியா..ஓ ஓ சொல்றியா, சாமி சாமி, ஸ்ரீவள்ளி, ஓடு ஓடு” ஆகிய பாடல்கள் தமிழிலும் ஹிட் ஆனது. குறிப்பாக 'ஓ சொல்றியா' பாடலுக்கு சமந்தா போட்ட கிளாமர் நடனம் சூப்பர் ஹிட்டானது. இப்பாடலை நடிகை ஆன்ட்ரியா பாடியிருந்தார். அடுத்து, 'சாமி சாமி' பாடல் அதைப் பாடிய ராஜலட்சுமி குரலாலும், ராஷ்மிகாவின் நடன அசைவுகளாலும் சூப்பர் ஹிட் ஆனது.
இதே போல மற்ற மொழிகளிலும் பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பு காரணமாக அனைத்து மொழிகளையும் சேர்த்து யு டியூபில் இந்தப் பாடல்கள் 1 பில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளதாக இசை உரிமையைப் பெற்றுள்ள ஆதித்யா மியூசிக் நிறுவனம் அறிவித்துள்ளது. சமீப காலங்களில் அனைத்து மொழிகளிலும் இப்படி ஒரு படத்தின் பாடல்கள் வரவேற்பைப் பெற்றதில்லை என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.