போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

இயக்குநர் சுசீந்திரனின் ஆஸ்தான இசை அமைப்பாளர் டி.இமான். சுசீந்திரன் இயக்கிய பாண்டியநாடு, ஜீவா, பாயும் புலி, மாவீரன் கிட்டு, நெஞ்சில் துணிவிருந்தால், கென்னடி கிளப் படங்களுக்கு இமான் இசை அமைத்தார். இதை தொடர்ந்து தற்போது 7 முறையாக மீண்டும் இணைகிறார்கள்.
இமானின் பிறந்த நாளில் அவரை சந்தித்து வாழத்து சொன்ன சுசீந்திரன் தனது அடுத்த படத்தை பற்றி அறிவிப்பையும் வெளியிட்டார். அது வருமாறு: பெரிய பட்ஜட்டில், நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கும் இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது துவங்கி நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு, மே 1 ஆம் தேதி துவக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப குழுவினர் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகவுள்ளது. இமான் இசை அமைக்கிறார்.