சூர்யா 46 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்! | மகன் இயக்கியுள்ள படம் குறித்து ஷாருக்கானின் நேர்மையான விமர்சனம் | நடிகர் சங்கத்தில் மீண்டும் சேருவேனா ? நடிகை பாவனா பதில் | டாம் குரூஸ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் ? பஹத் பாசில் விளக்கம் | ரஜினியின் ‛கூலி' படத்தின் மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவை ஆலியா பட்டுக்கு போட்டியாக சித்தரிக்கும் பாலிவுட் ஊடகங்கள்! | பலாத்காரம் செய்யப்பட்டாலும் பெண்களைத்தான் குறை சொல்கிறார்கள்! -கங்கனா ரணாவத் ஆவேசம் | தனுஷின் ‛இட்லி கடை'யில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ஷாலினி பாண்டே! | 58 வயதிலும் தீவிர ஒர்க்அவுட்டில் ஈடுபடும் நதியா! |
மோகன்லால், மஞ்சுவாரியர் மற்றும் பலர் நடித்து பிருத்விராஜ் இயக்கத்தில் மலையாளத்தில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் 'லூசிபர்'. இப்படத்தைத் தெலுங்கில் சிரஞ்சீவி, நயன்தாரா மற்றும் பலர் நடிக்க 'காட்பாதர்' என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார்கள். மோகன்ராஜா இயக்கும் இப்படம் கடந்த வருடம் ஜனவரி மாதம் பூஜையுடன் ஆரம்பமானது.
பல முயற்சிகளுக்குப் பின் இப்படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க சம்மதித்தனர். கடந்த வருடம் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார் நயன்தாரா. அதன்பிறகு சில பல காரணங்களால் படப்பிடிப்பு தாமதமானது. தற்போது மீண்டும் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வருகிறார்கள்.
சிரஞ்சீவி கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருப்பதால் அவர் சம்பந்தப்படாத மற்ற நடிகர், நடிகைகளின் காட்சிகளைப் படமாக்கி வருகிறார்கள். தற்போது ஐதராபாத்தில் நடக்கும் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்டு நடித்து வருகிறார். படப்பிடிப்பில் கலந்து கொண்டு பின் ஹோட்டலுக்குத் திரும்பிய நயன்தாராவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளன. தன்னைப் புகைப்படம் எடுப்பதைக் கொஞ்சம் கோபத்துடன் நயன்தாரா பார்க்கும் வீடியோவும் வெளிவந்துள்ளது.