பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் | முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' | ஆலியா பட், ரன்பீர் வசிக்கப் போகும் 250 கோடி புதிய பங்களா | மீண்டும் காதலருடன் வெளிப்படையாக நகர்வலம் வந்த சமந்தா : வைரலாகும் வீடியோ | பரிசு அறிவிப்பதில் நடந்த குளறுபடி : மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை | இலங்கை சுற்றுப்பயணத்தில் கூட்டத்தில் ஒருவனாக மாறிய மகேஷ்பாபு | எதிர்ப்பு வலுத்ததால் நடிகர் சங்க போட்டியில் இருந்து விலகிய வில்லன் நடிகர் | தலைவன் தலைவி 50 கோடி வசூல் என அறிவிப்பு | யு டியூப் ரிலீஸ் : அமீர்கான் வழியை மற்றவர்கள் பின்பற்றுவார்களா ? |
தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‛சைரா நரசிம்ம ரெட்டி, காட்பாதர்' போன்ற படங்களில் நடித்த நயன்தாரா தற்போது அவரது 157வது படத்திலும் இணைந்திருக்கிறார். அனில் ரவிபுடி இயக்கும் இதில் சிரஞ்சீவியும், நயன்தாராவும் திருமணமான தம்பதிகளாக நடித்து வருகிறார்கள். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முசோரியில் நடந்த நிலையில், தற்போது ஒரு காதல் பாடல் கேரளாவில் படமாக்கப்பட்டுள்ளது.
குடும்ப பின்னணி கொண்ட கதையில் உருவாகும் இந்த படத்தில் கேத்ரின் தெரசாவும் இன்னொரு நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை 2026ம் ஆண்டு சங்கராந்திக்கு வெளியிட்ட திட்டமிட்டுள்ளார்கள். மேலும், இப்படத்தில் சிரஞ்சீவியும் நயன்தாராவும் திருமணமான தம்பதிகளாக நடித்த போதும் அவர்களுக்கு இடையே ரொமான்டிக் காட்சிகள் அதிகமாக இடம்பெறுவதாகவும், தாங்கள் காதலித்த காலகட்டத்தை அவர்கள் நினைவு கூறும் இளமை ததும்பும் காட்சிகளும் இந்த படத்தில் இடம்பெற இருப்பதாகவும் இயக்குனர் அனில் ரவி புடி தெரிவித்துள்ளார்.