வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
'காதல் தேசம்' தொடங்கி பல படங்களில் நடித்தவர் அப்பாஸ். அவருக்கென தனி ரசிகைகள் கூட்டம் உண்டு. ஹீரோவாக, நண்பனாக பல கேரக்டரில் நடித்தவர். ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்பு குறைந்ததால் குடும்பத்துடன் நியூசிலாந்தில் செட்டில் ஆனார். 'ராமானுஜன்' படத்தில் கடைசி ஆக நடித்தார். அந்த படம் 2014ல் வெளியானது. பின்னர் அவர் இந்தியாவுக்கு அதிகம் வரவில்லை.
இந்நிலையில் மரியராஜா இளஞ்செழியன் இயக்க, ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் அப்பாஸ். நியூசிலாந்து நாட்டில் செட்டில் ஆனவர், இந்த படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகிறார். பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடக்கிறது. இதில் அப்பாஸ்க்கு வில்லன் வேடமா என்றால், அது சஸ்பென்ஸ். வித்தியாசமான கேரக்டர் என்கிறார் இயக்குனர். இதேபோல் வெளிநாட்டில் செட்டில் ஆன மறைந்த பாடகர் மலேசிய வாசுதேவன் மகன் யுகேந்திரனும் சென்னையில் மீண்டும் செட்டில் ஆகி உள்ளார்.