பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் | முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' | ஆலியா பட், ரன்பீர் வசிக்கப் போகும் 250 கோடி புதிய பங்களா | மீண்டும் காதலருடன் வெளிப்படையாக நகர்வலம் வந்த சமந்தா : வைரலாகும் வீடியோ | பரிசு அறிவிப்பதில் நடந்த குளறுபடி : மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை | இலங்கை சுற்றுப்பயணத்தில் கூட்டத்தில் ஒருவனாக மாறிய மகேஷ்பாபு | எதிர்ப்பு வலுத்ததால் நடிகர் சங்க போட்டியில் இருந்து விலகிய வில்லன் நடிகர் |
சூர்யாவின் 50வது பிறந்த நாளையொட்டி நேற்று ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவர் நடித்துள்ள கருப்பு படத்தின் டீசர் வெளியானது. அதேப்போல் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்த வரும் 46வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் சூர்யாவின் தோற்றம் ஏற்கனவே சூர்யா நடித்த ஜில்லுனு ஒரு காதல் படத்தின் சாயலில் இடம் பெற்றுள்ளது. அதோடு அந்த போஸ்டரில் மிக இளமையாக காணப்படுகிறார் சூர்யா. அந்த வகையில் கருப்பு படம் ஒரு ஜானர் என்றால் சூர்யா 46வது படம் இன்னொரு ஜானரில் உருவாகியிருப்பதை அந்த போஸ்டர் வெளிப்படுத்துகிறது. இந்த போஸ்டர் சூர்யா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்து வரும் இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.