துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல்களில் ஒன்றான 'என்றென்றும் புன்னகை' தொடரில் ஹீரோவாக நடித்து வந்த தீபக்குமார் தொடரை விட்டு விலகினார். இதனையடுத்து சித்து கதாபாத்திரத்தில் சீரியல் நடிகர் விஷ்னுகாந்த் நடிக்கவுள்ளார். விஷ்னுகாந்த் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் 'ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி', 'கோகுலத்தில் சீதை' ஆகிய தொடர்களில் ஏற்கனவே நடித்து வருகிறார். 'என்றென்றும் புன்னகை' தொடரின் மூலம் விஷ்னுகாந்த் சின்னத்திரையில் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
'என்றென்றும் புன்னகை' தொடர் திங்கள் முதல் சனி வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நட்சத்திரா ஸ்ரீனிவாஸ், கவிதா, நிதின் ஐயர், ராஜேஸ்வரி, சுஷ்மா நாயர் உள்ளிட்ட நடிகர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
முன்னதாக ஹீரோவாக நடித்து வந்த தீபக்குமாருக்கு அவருடைய காதலியும் சின்னத்திரை நடிகையுமான அபிநவ்யாவுடன் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. இதனையடுத்து தீபக் என்றென்றும் புன்னகை தொடரை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். அதேசமயம் அவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புதிய ப்ராஜெக்டில் கமிட்டாகியிருப்பதால், ஜீ தமிழ் சேனலை விட்டு வெளியேறிவிட்டதாக சொல்கிறார்கள்.