தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் தொடரான பாரதி கண்ணம்மாவில் முக்கிய நட்சத்திரங்கள் தொடரை விட்டு விலகுவதும், அவர்களுக்கு பதிலாக புதிய நடிகர்கள் வந்து அவர்களும் பிரபலமடைவதும் வாடிக்கையாகி வருகிறது. முன்னதாக கதையின் நாயகி ரோஷினி தொடரை விட்டு விலகிய போது சீரியல் இனி தேராது முடிந்துவிடும் என்று சொல்லி வந்தனர். ஆனால் புதுநடிகையான வினுஷா தேவி ஒருவாராக சமாளித்து ரசிகர்கள் மனதை வென்றார். அதேபோல் கண்ணம்மாவின் தங்கை கதாபாத்திரமான அஞ்சலி முதலில் வில்லி கதாபாத்திரமாகவும், அதன் பின் திருந்திவிட்டது போலவும் காட்டப்பட்டது. இந்த கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி வந்த கண்மணி மனோகரன் தற்போது தொடரை விட்டு விலகியுள்ளார்.
கண்மணி மனோகரன், ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சூப்பர் குயின் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டதுடன், புதிய சீரியலிலும் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார். இதன் காரணமாக அவர் பாரதி கண்ணம்மா தொடரை விட்டு விலகியுள்ளாராம். இந்நிலையில் அவருக்கு பதிலாக அருள்ஜோதி என்ற நடிகை அஞ்சலியாக நடிக்கவுள்ளார். அவரது போட்டோ தற்போது வைரலாகி வருகிறது. 'ஸ்வீட்டி அளவுக்கு இல்லேன்னாலும், இவங்களும் கொஞ்சம் ப்யூட்டி தான்'