பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்துள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் இந்த ஆண்டின் மிகப் பிரம்மாண்டமான படமாக வெளியாக உள்ளது. ஜனவரி மாதமே வெளியாக வேண்டிய படத்தை கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைத்தனர். அதன்பின் படம் மார்ச் 25ம் தேதியன்று வெளியாகும் என அறிவித்தார்கள்.
முன்னர் அறிவிக்கப்பட்ட வெளியீட்டுத் தேதியான ஜனவரி 7ம் தேதிக்கு முன்பாக படக்குழுவினர் மும்பை, சென்னை, கொச்சி, பெங்களூரூ ஆகிய இடங்களில் படத்திற்காக பத்திரிகையாளர் சந்திப்பு, வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்வுகள் ஆகியவற்றை நடத்தினர்.
ஐதராபாத்தில் பத்திரிகையாளர் சந்திப்பை மட்டும் நடத்தினர். வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்வை நடத்துவதற்குள் கொரோனா ஒமிக்ரான் தாக்கம் வந்ததால் படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைத்தனர். அப்போது நடைபெறாத விழாவை மார்ச் மாதம் நடத்த முடிவெடுத்துள்ளார்களாம். மேலும், படத்தின் பிரமோஷனுக்காக மீண்டும் மார்ச் மாதம் முதல் வாரத்திலிருந்தே பேட்டிகள், டிவி நிகழ்ச்சிகள் ஆகியவற்றை நடத்த உள்ளார்களாம்.
ஜனவரி 7ம் தேதி இந்தப் படத்தின் வருகைக்காக இந்தியத் திரையுலகமே காத்திருந்தது. இப்போது மார்ச் 25ம் தேதிக்காகக் காத்திருக்கிறார்கள்.