ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

மணிகண்டன் இயக்கத்தில் பிப்ரவரி 11ந்தேதி வெளியான படம் கடைசி விவசாயி. விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்திருந்த இந்தப் படத்தில் நல்லாண்டி என்ற பெரியவர் கதையின் நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தை பார்த்து வியந்து போன இயக்குனர் மிஷ்கின், மணிகண்டனை உசிலம்பட்டியில் உள்ள அவர் வீட்டிற்கு சென்று சந்தித்து மாலை அணிவித்து கட்டித்தழுவி பாராட்டி இருக்கிறார். அதையடுத்து இப்படத்தில் நாயகனாக நடித்து இருந்த நல்லாண்டியின் வீட்டுக்குச் சென்று அவர் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி உள்ளார்.
இது குறித்த புகைப்படம், வீடியோக்களை வெளியிட்டு மிஷ்கின் கூறுகையில், ‛‛கடைசி விவசாயி தந்த மகா கலைஞனாக மணிகண்டனை அவன் ஊரான உசிலம்பட்டிக்கு சென்று சந்தித்தேன். ஆரத் தழுவினேன். மிகச் சிறந்த படைப்பை தமிழுக்கு தந்த அவனுக்கு நன்றி கூறி அவன் கரங்களை முத்தமிட்டேன். அப்படத்தின் கதையின் நாயகனான ஒட்டுமொத்த இந்தியாவின் எல்லா விவசாயிகளின் அடையாளமாக வாழ்ந்த பெரியவரின் வீட்டுக்கு சென்று அவரது படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினேன். மணிகண்டன் படப்பிடிப்பு செய்த இடத்திற்கு சென்று மதிய உணவு உண்டோம். இந்த ஒரு நாள் ஒரு அற்புத நாளாக மாறியது. மணிகண்டா, உன் பயணம் தொடரட்டும். உன்னை இயற்கை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்'' என தெரிவித்துள்ளார்.