புகையிலை விளம்பரத்திற்கு ரூ.40 கோடி: தைரியமாக மறுத்த சுனில் ஷெட்டி | ‛பருத்திவீரன்' புகழ் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார் | 2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் | திடீரென மேலாளரை நீக்கிய விஷால் | பிளாஷ்பேக்: பாடல்கள் இல்லாத 'வண்ணக் கனவுகள்' | பிளாஷ்பேக் : ஜெமினி கணேசனுக்கு வில்லனாக நடித்த சிவாஜி கணேசன் | ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் |

வினோத் இயக்கத்தில் அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்துள்ள வலிமை படம் நாளை (பிப்.,24ல்) ரிலீஸாகிறது. அதிரடி ஆக் ஷன் காட்சிகளுடன், அம்மா, சகோதர சென்டிமென்ட் காட்சிகளுடன் உருவாகி உள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து அஜித் படம் வெளியாவதால் ரசிகர்களும் இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். ஞாயிறு வரை தமிழகத்தில் அநேக தியேட்டர்களில் இந்த படத்திற்கு நல்ல புக்கிங் கிடைத்துள்ளது.
இந்தப் படத்தில் பணிபுரிந்த தனது அற்புதமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார் ஹூமா குரேஷி. இவர் கூறும்போது, “வலிமை எனது சினிமா கேரியரில் மிகவும் சிறப்பானதொரு படம், எனது திறமையை பரிசோதித்து கொள்ள இதன் மூலம் எனக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது. இயக்குனர் வினோத் என்னுடைய கேரக்டரை நேர்மையான போலீஸ் அதிகாரியாக, நிறைய ஆக்சன் காட்சிகளைக் கொண்ட பாத்திரமாக உருவாக்கியுள்ளார்.
![]() |




