மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
அஜித் ரசிகர்களின் மனதில் நிறைந்த ஒரு படம் என்றால் வெங்கட் பிரபு இயக்கத்தில் 2011ல் வெளிவந்த 'மங்காத்தா' படத்தைச் சொல்லலாம். வித்தியாசமான அஜித்தை அந்தப் படத்தில் காட்டியிருந்தார் வெங்கட் பிரபு. அடுத்து எப்போது 'மங்காத்தா 2' எடுக்கப் போகிறீர்கள் என ரசிகர்கள் அவரிடம் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். ஆனால், அஜித்தோ தொடர்ந்து இயக்குனர் சிவாவுடன் பயணித்தார். இப்போது வினோத்துடன் பயணித்து வருகிறார். அவரது பார்வை எப்போது வெங்கட் பிரபு பக்கம் திரும்பும் என்றுதான் தெரியவில்லை.
இதனிடையே, நாளை வெளியாக உள்ள 'வலிமை' படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டைப் பெற்றுவிட்டதாக வெங்கட் பிரபு நேற்று பதிவிட்டிருந்தார். அதற்கு வெங்கட் பிரபுவின் அப்பா கங்கை அமரன், “பிரபு, பிரேமையும் கூட்டிட்டு போ” எனக் கமெண்ட் போட்டிருந்தார்.
ஒரு குறும்புக்கார ரசிகர், “விட்டுபுட்டே படம் எடுக்க மாட்டாங்க, விட்டுபுட்டா படம் பாப்பாங்க,” என குறும்புத்தமானக் போட்டிருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் அவரது தம்பியான பிரேம்ஜி கண்டிப்பாக இருப்பார் என்பது இந்த உலகத்திற்கே தெரிந்த விஷயம். அஜித் படத்தைப் பார்க்க தம்பி பிரேம்ஜியை விட்டுவிட்டா செல்வார் வெங்கட் பிரபு. நாளை அதிகாலை தெரிந்துவிடும்.