தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தமிழ் சினிமாவின் சீனியர் நடிகர்களில் மிக முக்கியமானவர் கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரமாக 1960ல் அறிமுகமாகி 2022 வரை சினிமாவில் நாயகனாக தொடர்வது மாபெரும் சாதனை என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
கடந்த நான்கு வருடங்களாக கமல்ஹாசன் நடித்த படங்கள் எதுவும் வரவில்லை. கடைசியாக அவர் நடித்து 2018ல் வெளிவந்த 'விஸ்வரூபம் 2' படம் அவரது ரசிகர்களைக் கூட திருப்திப்படுத்தவில்லை. அதற்கடுத்து 'இந்தியன் 2' படத்தில் அவர் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க ஆரம்பித்தது மகிழ்ச்சியைத் தந்தது. ஆனால், அந்தப் படம் அப்படியே அந்தரத்தில் நிற்கிறது. இருப்பினும் அந்த சோகத்தை மறக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'விக்ரம்' படம் பற்றிய அறிவிப்பு அவரது ரசிகர்களை மீண்டும் மகிழ்ச்சியில் தள்ளியது.
கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் படத்தைத் திட்டமிட்டபடி சீக்கிரமே முடித்துவிட்டார்கள். இன்று படத்தின் வெளியீட்டுத் தேதியும் ஜுன் 3 என அறிவிக்கப்பட்டுவிட்டது. படம் வெளிவர இன்னும் இரண்டரை மாதங்கள் இருந்தாலும் நான்கு வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் படத்தைத் தியேட்டர்களில் பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.