தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

அடுத்து வெளிவர இருக்கும் ஜி.வி.பிரகாஷ் படம் செல்பி. இதில் அவர் ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடித்துள்ளார். இவர்களுடன் கவுதம் வாசுதேவ மேனன், வித்யா பிரதீப், வேங்கை சந்திரசேகர், சங்கிலி முருகன் உள்பட பலர் நடித்துள்ளனர். வெற்றிமாறன் உதவியாளர் மதிமாறன் இயக்கி உள்ளார்.
படம் பற்றி அவர் கூறியதாவது : இது இதுவரை யாரும் சொல்லாத கதை. கல்வி நிறுவன மோசடிகள், கல்லூரி வளாக அரசியல் குறித்து நிறைய படங்கள் வந்திருக்கிறது. இது கல்வி மாபியாக்களின் கதை. பிரபலமான கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள். அந்த கல்லூரியில் மாணவர்களை புதிதாக சேர்த்து விட்டால் அவர்களுக்கு கல்வி நிறுவனம் கமிஷன் கொடுக்கும், மருத்துவ கல்லூரிகளுக்கு கோடிகணக்கில் பணம் புரளும். இந்த தொழிலில் ஈடுபடும் மாணவர்கள் காலப்போக்கில் படிப்பை மறந்து இதனையே முழுநேர தொழிலாக்கி கல்வி மாபியாக கேங்கிற்குள் நுழைந்து வாழ்க்கையை நாசமாக்கி கொள்வார்கள். அவர்களை பற்றிய கதைதான் இது.
எனது சொந்த நண்பனுக்கு நேர்ந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு அதில் கற்பனை கலந்து இந்த படத்தை எடுத்திருக்கிறேன். இது ஒவ்வொரு மாணவனுக்கும், மாணவனது பெற்றோர்களுக்கும் நல்ல பாடத்தை தரும். எந்த ஒரு கல்வி நிறுவனத்தையோ, தனிப்பட்ட நபர்களையோ குறிப்பிடாமல் பொதுவான கண்ணோட்டத்தில் இந்த விஷயத்தை பேசியுள்ளது படம். என்றார்.