வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

இந்தியாவின் சுதந்திரத்திற்காக இந்தியாவுக்கு வெளியேயும், உள்ளேயும் போராடியவர் வீர் சாவர்கர். ஆங்கிலேயர்களால் 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு 12 ஆண்டுகள் அந்தமான் தனிமை சிறையில் இருந்தவர். அங்கு கொடூர சித்ரவதைகளை அனுபவித்தவர்.
இந்திய சுதந்திரத்திற்காக இந்தியாவில் அபிநவ பாரத சங்கத்தையும் லண்டனில் சுதந்திர இந்திய சங்கத்தையும் உருவாக்கினார். இன்று இருக்கும் இந்து அமைப்புகளுக்கு முன்னோடியாக இருந்தவர் அவர். ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுத போராட்டம் நடத்த படை திரட்டியவர், இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து தனித்து செயல்பட்டதால் வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்டவர்.
தற்போது அவரது வாழ்க்கை திரைப்படமாகிறது. இதனை மகேஷ் மஞ்ச்ரேக்கர் இயக்குகிறார். 'சுதந்திர வீர் சாவர்க்கர்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர், ரன்தீப் ஹூடா, சாவர்க்கர் கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனந்த் பண்டிட் மற்றும் சந்தீப் சிங் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.
இதுகுறித்து ரன்பீர் ஹூடா கூறியிருப்பதாவது: சில கதைகள் சொல்லப்படுகின்றன, சில வாழ்கின்றன. சாவர்க்கர் படத்தின் ஒருபகுதியாக இருக்கப்போவதை நினைத்து பெருமையாகவும், உற்சாகமாகவும் உள்ளது. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்க பலர் பங்காற்றியுள்ளனர். இருப்பினும், அனைவருக்கும் அதற்கு உண்டான மரியாதை கிடைக்கவில்லை.
வீர் சாவர்க்கர் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர். அவர் குறித்து அதிகம் விவாதிக்கப்படுகிறது. அறியப்படாத அவருடைய கதையைச் சொல்ல வேண்டும். எனக்கு இது மற்றொரு சவாலான பணியாக இருக்கும் இருக்கும். என்கிறார்.