திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் | நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு | 'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு | விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | ரஜினியின் அடுத்த பட இயக்குனர்?: நீடிக்கும் குழப்பம் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் | 2025 தமிழ் சினிமா ஒரு ரீ-வைண்ட் | ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புகையிலை விளம்பரத்திற்கு ரூ.40 கோடி: தைரியமாக மறுத்த சுனில் ஷெட்டி |

ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியாகியுள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படம் ரசிகர்களை மட்டுமல்லாமல் ஒரு பார்வையாளராக திரையுலக பிரபலங்களையும் பிரமிக்க வைத்துள்ளது. பலரும் முதல் நாளன்றே இந்த படத்தை பார்த்துவிட்டு தங்களது வியப்பை விதவிதமான வார்த்தைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் நடிகர் மகேஷ்பாபுவும் ஆர்ஆர்ஆர் படத்தை பார்த்துவிட்டு இது ஒரு காவியம் என்று பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து மகேஷ்பாபு கூறும்போது, “இங்கே திரைப்படங்கள் மற்றும் ராஜமவுலியின் திரைப்படங்கள் என இரண்டு விதமான படங்கள் இருக்கின்றன. அந்த அளவிற்கு ஒரு காவியமாக இந்த படத்தை கொடுத்துள்ளார் ராஜமவுலி. படத்தின் பட்ஜெட், பிரமிக்க வைக்கும் காட்சிகள், இசை, உணர்வுகள் என அனைத்துமே கற்பனைக்கு அப்பாற்பட்டவை. நம்மை மூச்சு விடக்கூட மறக்க செய்பவை. குறிப்பாக படத்தில் உள்ள பல காட்சிகளை நீங்கள் பார்க்கும்போது உங்களை மறந்து கதிக்குள் உங்களையே இணைத்து கொள்ளும் அளவிற்கு அப்படி ஒரு திரை அனுபவத்தை இந்த படம் கொடுத்திருக்கிறது. அப்படி ஒரு பரபரப்பான படத்தை கொடுத்துள்ளார் மாஸ்டர் ராஜமவுலி.
மேலும் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் இருவருமே நட்சத்திரங்கள் என்பதையும் தாண்டி அவர்களது நடிப்பால் பிரமிக்க வைத்து உள்ளார்கள். குறிப்பாக நாட்டு நாட்டு பாடலில் புவியீர்ப்பு விசை என்பது இருக்கின்றதா என்பதே தெரியவில்லை. அந்த அளவிற்கு இருவரும் பறந்து இருக்கிறார்கள். இதுபோன்ற அற்புதமான படைப்பை கொடுத்ததற்காக மொத்த படக்குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார் மகேஷ்பாபு.