துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
94வது ஆஸ்கர் விருது விழாவில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் அரங்கேறியது. சிறந்த நடிகருக்கான விருது பெற்ற வில் ஸ்மித் தனது மனைவியை பற்றி மோசமாக வர்ணித்த தொகுப்பாளரை மேடையிலேயே பளார் என அறைந்தார். சிறந்த நடிகை விருது வெற்ற ஜெசிகா ஜாய்டன் உலக அரசியல் பேசினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் தி வெஸ்ட் சைட் ஸ்டோரி படத்திற்கு ஒரு விருது மட்டுமே கிடைத்தது.
இவற்றுக்கு இடையில் இன்னொன்றும் நடந்தது. விழாவில் கோடா என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ட்ராய் கோட்சுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. ஆஸ்கர் வென்ற இரண்டாவது காது கேளாத நடிகர் இவர். இதே படத்தில் நடித்திருந்த மார்லீ மார்டின் தான் ஆஸ்கர் விருது பெற்ற முதல் காது கேளாத நடிகர். 1987ம் ஆண்டு நடந்த ஆஸ்கர் விழாவில் சில்ட்ரன் ஆப் லீசர் காட் படத்திற்காக அவருக்கு வழங்கப்பட்டது.
உலகெங்கும் வாழும் காது கேளாத மனிதர்களுக்கு இந்த விருதை சமர்ப்பிப்பதாக ட்ராய் உருக்கமுடன் தெரிவித்தார்.