27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சினிமாவில் பொறுமை அவசியம் ; நல்ல படங்களுக்காக காத்திருக்கிறேன்... : புதுமுகம் ஜீவிதா! | தம்பதிகளின் உறவுச் சிக்கலை பேசும் ‛மதர்' | சிங்கப்பூரில் மறு தணிக்கை செய்யப்பட்ட 'கூலி' | பிளாஷ்பேக் : நண்பருக்காக சம்பளம் வாங்காமல் நடித்த மோகன் | பிளாஷ்பேக் : அக்கா குடும்பத்திற்காக சினிமாவை துறந்த தங்கை | ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் |
விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' படங்களை தொடர்ந்து சிம்புவை மூன்றாவது முறையாக வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் இயக்குகிறார் கவுதம் மேனன் . குஜராத்தி நடிகை சித்தி இட்னானி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ராதிகா இந்தப் படத்தில் சிம்புவின் அம்மாவாக நடித்துள்ளார். ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். மும்பையில் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. தற்போது 'வெந்து தணிந்தது காடு' படத்தின் படப்பிடிப்பு uமுழுவதுமாக நிறைவு பெற்றுள்ளது. இதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இதுபற்றி சிம்பு கூறுகையில், ‛‛பல உழைப்புக்கும், தியாகத்துக்கும் பிறகு படப்பிடிப்பு முடிவடைந்தது'' என தெரிவித்துள்ளார்.