இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி | அமலாக்கத்துறை முன் விஜய் தேவரகொண்டா ஆஜர் | பிரமானந்தம் - யோகிபாபு சந்திப்பு ஏன்? |
லிங்குசாமி இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் படம் 'தி வாரியர்'. இப்படத்தில் ராம் பொத்தினேனி, கிரித்தி ஷெட்டி, ஆதி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'புல்லட்' பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. உதயநிதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பாடலை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் ராம் பொத்தினேனி, கிரித்தி ஷெட்டி இருவரும் அருமையாகத் தமிழில் பேசி ஆச்சரியப்படுத்தினார்கள். அதிலும் ராம் மிகவும் தெள்ளத் தெளிவாகப் பேசினார். அவருடைய பேச்சில் தெலுங்கு வாடை துளி கூட இல்லை. சென்னையில் உள்ள தனியார் பள்ளியில்தான் படித்து வளர்ந்தாராம் ராம். அதனால்தான் இவ்வளவு அருமையாகப் பேசினார் என்றார்கள்.
'உப்பெனா' படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக இளம் ரசிகர்களைக் கவர்ந்த கிரித்தி ஷெட்டியும் தமிழில் பேசி ஆச்சரியப்படுத்தினார். தற்போது பாலா இயக்கத்தில் சூர்யா ஜோடியாக நடித்து வருகிறார் கிரித்தி.
நேற்று வெளியிட்ட 'புல்லட்' பாடலை சிம்பு பாடியுள்ளார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. 'தி வாரியர்' படத்தை தனித் தனியாக தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் படமாக்கியுள்ளதாக தெரிவிக்கிறது படக்குழு.