சிக்மா படத்தின் டீசர் எப்படி இருக்கு | 60 நாட்களில் நிறைவு பெற்ற கென் கருணாஸ் பட படப்பிடிப்பு | முதன்முறையாக இணையும் சிரஞ்சீவி மோகன்லால் கூட்டணி | பைக் சாகசம் செய்து வீடியோ வெளியிட்ட பார்வதி | ஜன., 7ல் பாக்யராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம் ; ரஜினி பங்கேற்கிறார் | கோல்கட்டாவில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சிறந்த நடிகர் விருது | 30 வருடம் கழித்து கேரள துறைமுகத்திற்கு விசிட் அடித்த பம்பாய் படக்குழு | மறைந்த நடிகர் சீனிவாசனின் உண்மையான வயது என்ன? கிளம்பிய விவாதமும் தெளிந்த உண்மையும் | ஜெயிலர் 2வில் பெரிய ரோலில் நடிக்கிறேன் : சிவராஜ்குமார் | உம்மைப் பற்றி பேசாத நாளில்லை : கமல் |

முதல் முறையாக நடிகர் ஜெய் மற்றும் இயக்குனர் சுந்தர் சி இணைந்து நடித்துள்ள படம் பட்டாம்பூச்சி . சைக்கோ த்ரில்லரில் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில் சுந்தர் சி போலீசாகவும், ஜெய் சைக்கோ கொலைக்காரனாகவும் நடித்துள்ளனர். இயக்குனர் பத்ரி இப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் ஹனிரோஸ் வர்கீஸ், இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நவ்நீத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். குஷ்பூவின் அவ்னி டெலி மீடியா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் மே மாதம் 13ம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் டீசரை நடிகர்கள் விஷால், ஆர்யா மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து இன்று வெளியிட்டுள்ளனர். இந்த டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.