இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி | அமலாக்கத்துறை முன் விஜய் தேவரகொண்டா ஆஜர் | பிரமானந்தம் - யோகிபாபு சந்திப்பு ஏன்? |
மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் சரித்திர படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கிறது. விக்ரம்,கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், ஜெயராமன் உள்பட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது ஏ. ஆர். ரகுமான் பழங்கால இசைக்கருவிகளை தேடி கண்டுபிடித்து பின்னணி இசை அமைத்து வருகிறார். ஏற்கனவே ரெக்கார்டிங் தியேட்டரில் மணிரத்னமும். ஏ.ஆர்.ரகுமானும் இசைக்கருவிகள் வாசிப்பவர்களுக்கு ஆலோசனை கொடுக்கும் வீடியோக்கள் வெளியான நிலையில், தற்போது சிலர் ட்ரம்ஸ் இசைக்கருவிகளை வாசிக்கும் வீடியோ ஒன்று சோசியல் வீடியோவில் வெளியாகி வருகிறது. இதை ரகுமானின் ரசிகர்கள் வைரலாக்கி கொண்டிருக்கிறார்கள்.