ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு ; நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்கும் முயற்சியா? | நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா | இதுவே உங்கள் மகளாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? மம்முட்டியிடம் கேள்வி எழுப்பிய பெண் தயாரிப்பாளர் | இதைவிட பெருமை என்ன இருக்கு : முதல்வர் சந்திப்பு குறித்து நடிகை எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | தனுஷின் சகோதரிகளை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் மிருணாள் தாக்கூர் | 'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் | தலைவன் தலைவி சக்சஸ் மீட் எப்போது | இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வரும் அனுஷ்கா | முருகதாஸ், சிவகார்த்திகேயன் இரண்டு பேருக்கும் மதராஸி முக்கியம் | 'த காலர்' பிரிட்டிஷ் படத்தின் காப்பியா 'ஹவுஸ்மேட்ஸ்'? |
தமிழகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தெலுங்கில் விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்து திறமையான நடிகை எனப் பெயரெடுத்தவர் சாய் பல்லவி. அவருக்குத் தமிழில் இன்னும் சரியான படங்கள் அமையவில்லை.
தற்போது அவர் தமிழ், கன்னடம், தெலுங்கில் தயாராகியுள்ள 'கார்கி' என்ற படத்தில் முதன்மைக் கதாநாயகியாக நடித்துள்ளார். இன்று சாய் பல்லவியின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் சிறிய வீடியோ முன்னோட்டம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், கன்னடம், தெலுங்கு மூன்று மொழிகளிலுமே சாய் பல்லவியே தனது சொந்தக் குரலில் படத்திற்காக டப்பிங் பேசியுள்ளார். அதையும் முன்னோட்ட வீடியோவில் காட்டியுள்ளார்கள்.
கௌதம் ராமச்சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு நிவின் பாலி நடித்த 'ரிச்சி' படத்தை இயக்கியவர். சாய் பல்லவி தெலுங்கில் நடித்துள்ள 'விராட பர்வம்' படத்தில் அவரது கதாபாத்திர அறிமுக வீடியோவும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் ஜுலை 1ம் தேதி வெளியாக உள்ளது.