அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு |
தெலுங்குத் திரையுலகத்தில் இருந்து அடுத்தடுத்து பான்-இந்தியா நடிகர்கள் உருவாகி உள்ளார்கள். பிரபாஸ், அல்லு அர்ஜுன், ஜுனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோர் இப்போது இந்திய அளவிலும், ஹிந்தி ரசிகர்களிடமும் பிரபலமாகிவிட்டார்கள். கன்னட நடிகரான யஷ் கூட அவர்கள் வரிசையில் சேர்ந்துவிட்டார்.
ஆனால், தெலுங்கின் டாப் நடிகர்களில் ஒருவரான மகேஷ் பாபு தனக்கு அந்த ஆசையில்லை என தெரிவித்துள்ளார். அவர் நடித்து மே 13ம் தேதி வெளிவர உள்ள 'சர்க்காரு வாரி பாட்டா' படத்தின் பிரமோஷன் நிகழ்வின் போது அவர் பேசுகையில், “தெலுங்கில் மட்டுமே எப்போதும் நடிக்க ஆசை. அதை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பார்த்து ரசிக்கட்டும். இப்போது அது நடக்கும்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
பாலிவுட்டில் எனக்கு வாய்ப்பளிக்க மாட்டார்கள். அதனால், நான் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. இங்கு தெலுங்கில் எனக்குக் கிடைக்கும் அன்பு, நட்சத்திர அந்தஸ்து ஆகியவை நிறைவாக கிடைக்கும் போது வேறு திரையுலகத்திற்கு செல்ல எண்ணவில்லை. இங்கு படத்தில் நடித்து அது பெரிய அளவில் பேசப்படட்டும். நான் நினைத்தது இப்போது நிஜத்தில் நடந்து கொண்டிருக்கிறது,” என்று தெரிவித்துள்ளார்.
மகேஷ் பாபு அப்படி பேசியிருந்தாலும் அடுத்து ராஜமௌலியின் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ள படம் பான்--இந்தியா படமாகத்தான் உருவாக உள்ளது.