‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா | ரசிகர்களை சந்தித்த ரஜினி, அட்வைஸ் செய்த கமல், புதுப்புது அறிவிப்புகள், போஸ்டர்கள் : களைகட்டிய 2026 துவக்கம் | 'மார்க்' டப்பிங் படத்துடன் ஆரம்பமான 2026 வெளியீடுகள் | ரஜினி 173... அஸ்வத் மாரிமுத்துவிற்கு அடிக்கிறது அதிர்ஷ்டம் | 2026ல் எதிர்பார்க்கப்படும் படங்கள் : வசூல் சாதனை புரியுமா ? | ரஜினி 173, கமல் 237, அஜித் 64, தனுஷ் 55 : பொங்கலுக்குள் அறிவிப்புகள் வருமா? |

'பீஸ்ட்' படத்திற்குப் பிறகு அதன் இயக்குனர் நெல்சன் திலீப்குமாருக்கு ரஜினியின் 169வது படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பும் 'பீஸ்ட்' பட வெளியீட்டிற்கு முன்பே வெளிவந்தது. படத்தின் படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகும் என்பது குறித்த தகவல் இல்லை. இப்படத்திற்கான கதையை ரஜினிகாந்த்தே எழுதிவிட்டாராம். நெல்சனை திரைக்கதை அமைத்து வசனம் எழுதி இயக்கச் சொல்லி இருந்தார்களாம்.
'பீஸ்ட்' படம் முடிந்த பின் திரைக்கதை விவாதம் நடைபெற்றுள்ளது. அதன்பின் நெல்சன் சொன்ன திரைக்கதை ரஜினிகாந்துக்கு திருப்தி தரவில்லையாம். அதனால், ரஜினிகாந்த் அவரது ஆஸ்தான இயக்குனரான கேஎஸ் ரவிக்குமாரிடம் படத்தின் திரைக்கதையை எழுதித் தரக் கேட்டுள்ளாராம். அதை தற்போது ரவிக்குமார் எழுதி வருவதாகத் தகவல். அதன் காரணமாக படப்பிடிப்பு இன்னும் கொஞ்ச நாட்கள் தள்ளிப் போக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
திரைக்கதை எழுதி முடித்த பின்தான் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகளின் தேர்வு நடக்கும் எனத் தெரிகிறது.