மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
தமிழ், தெலுங்கில் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடித்து வருபவர் ஆதி. பல வெற்றிப் படங்களைக் கொடுத்த தெலுங்கு இயக்குனர் ரவிராஜா பினிசெட்டியின் இரண்டாவது மகன். இவருக்கும் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் நிக்கி கல்ராணிக்கும் இன்று சென்னையில் தெலுங்கு முறைப்படி திருமணம் நடைபெற்றது. நிக்கி கர்நாடகாவைச் சேர்ந்தவர். ஆதி அவரது பெற்றோருடன் பல வருடங்களாக சென்னையில்தான் வசித்து வருகிறார்.
இத்திருமணத்தில் இருவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நேற்றிரவு திருமண வரவேற்பு நிகழ்வும் நடைபெற்றுள்ளது. அவற்றின் புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளன.
ஆதி தற்போது தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் 'தி வாரியர்' படத்தில் வில்லனாக நடித்துள்ளார். நிக்கி கல்ராணி மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
ஆதி, நிக்கி இருவரும் இணைந்து 'யாகவராயினும் நா காக்க, மரகத நாணயம்' ஆகிய படங்களில் நடித்துள்ளனர். அந்த சமயத்தில் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. ஆனால், இருவருமே தங்களது காதலை வெளிப்படையாக சொல்லிக் கொண்டதில்லை என சில தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தனர்.