தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' மூலம் பிரபலமடைந்தவர் அஷ்வின். சில மாதங்களுக்கு முன்பு இவரது முதல் திரைப்படமான 'என்ன சொல்ல போகிறாய்' வெளியானது. தற்போது அவரது அடுத்த படம் குறித்தான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 'மைனா', 'கும்கி' படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரபு சாலமனுடன் தான் அஷ்வின் அடுத்த படம் நடித்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பு கொடைக்கானல், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல இடங்களில் நடந்து வருகிறது. இப்படம் முழுவதுமே பேருந்துக்குள் நடக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாம். நகைச்சுவை நடிகை கோவை சரளா 90 வயது முதிர்ந்த ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பஸ் கண்டக்டராக தம்பி ராமையா நடிக்கிறாராம்.
பிரபு சாலமனின் முந்தைய படங்களை போலவே இந்த கதைக்களமும் இயற்கை சார்ந்த இயல்பான கவனம் பெறக் கூடிய ஒன்றாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இப்படத்தின் முதல் பார்வை மற்றும் படத்தலைப்பு வரும் 20-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .