அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ‛விக்ரம்'. நான்கு ஆண்டுகளுக்கு பின் கமல் வெளியாகி இருப்பதாலும் படம் சிறப்பாக வந்திருப்பதாலும் வரவேற்பையும், வசூலையும் குவித்து வருகிறது. கடந்த 5 நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலை எட்டியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் வசூல் சிறப்பாக இருப்பதால் என்னவோ இந்த படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான கமல்ஹாசன் படக்குழுவினருக்கு பரிசு வழங்கி வருகிறார்.
நேற்று இயக்குனர் லோகேஷிற்கு சுமார் ரூ.70 லட்சம் மதிப்பிலான லெக்ஸ் ரக காரை பரிசாக அளித்தார். அவரின் உதவி இயக்குனர்கள் 13 பேருக்கு பைக் பரிசளித்தார். இந்நிலையில் இன்று இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரோலெக்ஸ் என்ற வேடத்தில் நடித்த சூர்யாவுக்கு உயர் ரக கை கடிகாரங்களில் ஒன்றான ரோலெக்ஸ் கடிகாரத்தை பரிசாக வழங்கி உள்ளார் கமல். இதற்கு நன்றி தெரிவித்துள்ள சூர்யா, இது மாதிரியான தருணங்கள் வாழ்க்கையை அழகாக்கின்றன'' என கூறியுள்ளார். இது தொடர்பான போட்டோக்களை வெளியாகி வைரலாகி வருகின்றன.