துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர் மீரா மிதுன். மாடலிங் துறையில் தன்னை சூப்பர் மாடல் என்று அழைத்துக் கொள்வார். அழகி போட்டிகளும் நடத்தினார். இவர் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பரபரப்பாக எதையாவது பேசியும், வீடியோவும் வெளியிடுவார். அது ஒரு நாள் எல்லை மீறி அவரை சிக்கலில் மாட்ட வைத்தது.
பட்டியலின மக்கள் குறித்து அவர் அவதூறாக பேசிய வீடியோ ஒன்று வெளியானது. இதை தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் அவர் மீது போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து, மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில், அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மீரா மிதுன் விசாரணைக்கு ஆஜராகுவதிலிருந்து விலக்கு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 2வது நபரான சாம் அபிஷேக், வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி தாக்கல் செய்த நிலுவையில் இருப்பதால் வழக்கை வருகிற 22ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம் அன்றைய தினம் இருவரும் ஆஜராக வேண்டும். குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.