தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் |

விஜய்சேதுபதி தற்போதைய படங்களில் இளம் ஹீரோவாகவும் நடுத்தர வயது நபராகவும் சில படங்களில் வயதான மனிதராகவும் விதவிதமான கெட்டப்புகளில் நடித்து வருகிறார். அதேசமயம் குறிப்பாக மீசையில்லாத அல்லது மீசையை ட்ரிம் செய்த விஜய்சேதுபதியின் லுக் தான் இளம் ரசிகைகள் பலருக்கும் பிடித்தமான ஒன்று... ரசிகர்களுக்கு மட்டுமல்ல, பிரபல இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனுக்கு கூட விஜய் சேதுபதியின் அப்படிப்பட்ட தோற்றம் தான் ரொம்பவே பிடிக்குமாம்.
இப்போது அல்ல.. கடந்த 12 வருடங்களுக்கு முன்பு விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்க வருவதற்கு முன்பாகவே குறும்படங்களில் நடித்து வந்த காலகட்டத்தில் அல்போன்ஸ் புத்ரனுடன் நெருக்கமான நட்பில் இருந்து வந்தவர். அப்போதே விஜய்சேதுபதியின் விதவிதமான தோற்றங்களை புகைப்படம் எடுப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார் இயக்குனராவதற்காக முயற்சி செய்துவந்த அல்போன்ஸ் புத்ரன். அப்படி 2010-ல் தான் எடுத்த விஜய்சேதுபதியின் புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.. இந்த புகைப்படம் தற்போது விஜய்சேதுபதி ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.