கூலி டைம் டிராவல் கதையா.? | 500 கோடி வசூலைக் கடந்த 'சாயாரா' | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கனிமா' | ஸ்ரீதேவியை பார்த்து இன்ப அதிர்ச்சியான சுதீப் ; உஷார் படுத்திய விஜய் | அடூர் கோபாலகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் ; பின்னணி பாடகர் சங்கம் கோரிக்கை | வேட்பு மனுவை நிராகரித்த தயாரிப்பாளர் சங்கம் ; நீதிமன்றத்தை நாடும் பெண் தயாரிப்பாளர் | இந்த ஆட்களை எல்லாம் நிச்சயமாக எல்சியுவில் சேர்க்க மாட்டேன் ; லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: திறமையான திரைக்கதை, திகைக்க வைக்கும் நடிப்பால் வென்று காட்டிய “தெய்வமகன்” | திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு |
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்திற்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில் கே.ராஜன் தலைமையில் ஒரு அணியினரும் திருவேங்கடம் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர். உடல்நலக்குறைவு காரணமாக தற்போதைய தலைவர் டி.ராஜேந்தர் போட்டியிடவில்லை.
இந்த தேர்தலில் கே.ராஜன் தலைமையிலான நிர்வாகிகள் அனைவரும் வெற்றி பெற்றனர். தலைவராக கே.ராஜன் வெற்றி பெற்றார். செயலாளராக கே.காளையப்பன், துணை தலைவராக எஸ்.நந்தகோபால், பொருளாளராக பி.முரளி, இணை செயலாளராக சாய் என்கிற சாய்பாபா ஆகியோர் தேர்வு பெற்றார்கள். செயற்குழு உறுப்பினர்கள் 16 பேர்களில் 9 பேர் கே.ராஜன் அணியை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.