‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு |
தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமான ராகவா லாரன்ஸ் அதையடுத்து ஹீரோ, இயக்குனர் என்று பன்முகம் காட்டி வருகிறார். அதோடு தமிழில் காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 போன்ற படங்களை இயக்கி நடித்த லாரன்ஸ், காஞ்சனா படத்தை ஹிந்தியில் அக்ஷய்குமாரை வைத்து லட்சுமி என்ற பெயரிலும் ரீமேக் செய்திருந்தார். தற்போது அவர் ருத்ரன், அதிகாரம், துர்கா, சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதோடு, சினிமாவில் நடித்துக் கொண்டே தொடர்ந்து சமூக சேவைகளும் செய்து வருகிறார் லாரன்ஸ்.
அந்த வகையில் சொந்தமாக ஆசிரமம் ஒன்றை நடத்தி வரும் அவர், ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி மற்றும் மருத்துவ சேவையும் வழங்கி வருகிறார். இந்த நிலையில் லாரன்ஸின் இந்த சமூக சேவையை பாராட்டி அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அந்த பட்டத்தை ராகவா லாரன்ஸ் சார்பாக அவரது தாயார் பெற்றுக் கொண்டுள்ளார். இந்த டாக்டர் பட்டத்தை அவருக்கு சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் வழங்கி இருக்கிறது. அது குறித்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள ராகவா லாரன்ஸுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.